இனவாதிகளால் கலவரம் ஏற்படலாம்:இரா.சம்பந்தன்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாட்டைத் தமது கைகளுக்குள் இனவாதிகள் கொண்டு வந்துள்ளனர்.அவர்களின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆட்சியைப் பிடிக்க முயலும் ஒரு கும்பல்தான் இந்த இனவாதிகளைப் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றனர்.
நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் குறியாகவுள்ளனர் போல் தெரிகின்றது.
எனவே, இதனை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் வேடிக்கை பார்க்காது மிரட்டல்களுக்கு அடிபணியாது உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply