தற்போதைய ஜனாதிபதிதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் : முதுஹெட்டிகம எம்.பி.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, பொருத்தமான ஒரு வேட்பாளரை கட்சி அறிமுகம் செய்யும் என காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்த வேட்பாளர் வேறு யாரும் அல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எனது உத்தியோகபுர்வ அறிவிப்பு அல்ல. இருப்பினும், இவரைத் தவிர பொருத்தமான வேறு எவரும் இக்கட்சியில் இல்லை என்பதை, கட்சியில் 21 வருடங்கள் இருக்கின்றவன் என்ற வகையில் அறிந்து வைத்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியானவரும், பொருத்தமானவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் என்பதை கூற வேண்டும். நாம் நம்பிக்கையுடன் இதனைக் கூறுகின்றோம். எம்மால் தேர்தலில் வெற்றி பெறவும் முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்வதற்கான திட்டத்தை எமது கட்சியின் பொதுச் செயலாளர் வெளிப்படுத்தியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply