துபாயில் சாலை விபத்து : பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாப பலி
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
துபாய் அருகே வந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து நடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், பேருந்தில் பயணித்தவர்கள் ஓமனில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்குபெற்று திரும்பியது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply