அமைச்சர் டக்ளஸ் வவுனியாவில்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா சென்றுள்ளார். சில தினங்கள் வவுனியாவில் தங்கியிருக்கும் அமைச்சர் குழுவினர் மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடர் பாக ஆராயவுள்ளனர். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய தேவைகள் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். இதற்கிடையில் நேற்று நகர சபை மண்டபத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் வவுனியா நகர சபை தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சருடன் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் வி. சந்திரகுமார் மற்றும் முக்கியஸ் தர்கள் பலரும் சென்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply