விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைய எனது உதவியை நாடியுள்ளனர்: அமைச்சர் முரளீதரன்
கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியுள்ளதாகத் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறுகின்றார்.”கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் காடுகளில் தங்கியிருக்கும் இந்தச் சிறு குழுக்களின் தலைவர்கள் என்னுடன் இது குறித்து தொடர்பு கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தை பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இப்போது அவர்கள் சரணடைவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்” எனவும் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply