கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் மேலும் உதவி
வட பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 160 மில்லியன் ரூபாய்களை மேலதிக நன் கொடையாகப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் கண்ணி வெடிகளை அகற்றும் மனிதாபிமான பணிகளை டெனிஷ் குழுவும், ‘ஹலோ ட்ரஸ்ட்’ நிறுவனமும் மேற் கொள்ளும்.
ஏற்கனவே, மன்னார் மாவட்டத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் மனிதாபி மான பணிகளுக்காக ஜப்பானிய அரசு 80 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இதன்படி, இந்தப் பணிகளுக்காக ஜப்பானிய அரசு இதுவரை 240 மில்லியன் ரூபாயைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜப் பானிய தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்ணி வெடிகளற்ற ஓர் இலங்கைக்கான இலங்கை அடை வதற்கும், மீள்குடியேற்ற பணிகளுக்காகவும் 2003 லிருந்து இன்று வரை 2,250 மில்லியன் ரூபாய்களை ஜப்பானிய அரசு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply