நிவாரணக் கிராமங்களில் ஒசுசல மருந்தகங்கள்: ஜனாதிபதி அவசர பணிப்பு
வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஐந்து அரசாங்க ஒசுசல மருந்தகங்கள் உடனடியாக நலன்புரி நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சுகாதார பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் நலன்புரி நிலையங்கள் அமையப் பெற்றிருக்கும் ஐந்து வலயங்களில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் ஸ்தாபிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவருக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.
அதேநேரம் அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஐந்து, ஒசுசல மருந்தகங்களை அமைப்பதற்குப் பொருத்த மான இடங்களைப் பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை செட்டிக்குளம் பிரதேசத்தில் மருந்துப் பொருள் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவர் ரன்ஜித் மலிகஸ்பே ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை அமைச்சரிடம் நேற்று கையளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply