இடைத்தங்கல் முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோர்

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமொன்றில் புலிகள் இயக்க மேல்மட்ட தலைமை உறுப்பினரது குடும்ப மற்றும் உறவினர்களுடன் பிரபாகரனின் பெற்றோரும் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  திருவேங்கடம் வேலுப்பிள்ளை (77), வேலுப்பிள்ளை பார்வதி (71) ஆகியோரரின் நாலு பிள்ளைகளில் பிரபாகரன் கடைசி மகனாகும்.

புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பெண்கள் பிரிவின் பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவாதையும் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களோடு மக்களாக வெளியேறி இடைதங்கல் முகாமொன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது தாயாரும், சித்தியாரும் சேர்ந்து வெளியேறி வந்துள்ளனர். பரந்தன் சைவ வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரணமும் கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலத்தில் க.பொ.த உயர் தரம் படித்த தமிழினி புலிகள் இயக்கத்தில் 1991ல் சேர்ந்துள்ளார். விசேட பொலிஸாரால் மேலதிக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply