வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களையும் பயணத்தையும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறானவர்களை கைதுசெய்வதற்கான சர்வதேச உதவிகள் தற்போது கிடைத்துள்ளன. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அனைத்து நாடுகளிலும் இருப்பதாகவும் போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அந்த நாடு விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளது எனவும் இலங்கை  வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply