உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் வகையில் விசேட ஏற்பாடு :தேர்தல் திணைக்களம்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கான வேட்புமனுக் கோரல் அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு இடம்பெறும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டப்ளியூ. பீ. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் புத்தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வேறு வாக்கு சாவடிகளில் வாக்களிப்பதற்காக சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் ஊடக விண்ணபிக்க வேண்டும் எனவும் சுமணசிறி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply