இலங்கை ஜனாதிபதி அடுத்த வாரம் புதுடெல்லி வருகிறார் : கிருஷ்ணா

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் புதுடெல்லி வருகிறார் என, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், எஸ். எம். கிருஷ்ணா பெங்களூர் வந்த போது செய்தியாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் இலங்கை ஜனாதி்பதி மகிந்த ராஜபக்ச, டில்லி வருவார் என எதிர்பார்க்கிறோம். இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்து, அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். தமிழர்கள் வாழும் பகுதியில் சீரமைப்பு பணி செய்வது என்பது மிகப்பெரிய பணி. இது குறித்து அவர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனிடமும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடமும், தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பது குறித்து அவர் உறுதியளித்துள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் புதுடில்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply