மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்
கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. இதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக ஏறி வந்தார். அவர் வரும் விவரம் பற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது, கடலோர காவல்படையினர் அந்த இழுவை கப்பலை வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் பல்வேறு உளவுப்பிரிவு போலீசாரும் பழைய துறைமுகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார்.
அவரை இந்திய கடற்படை சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு கடற்படையிடம் ஓப்படைக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply