ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 36 மணி நேரமாக நீடிக்கும் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவுடன் இணைந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை அணியை சேர்ந்த சில வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அவர்களுடன் சேர்த்து 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திவருவதால் இறந்தவர்களின் உடலை மீட்க இயலவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லைப்பகுதியில் கடந்த 36 மணி நேரத்தை தாண்டியும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply