ஐ.தே.க.யின் உள்வீட்டு முறுகல் உக்கிரம், ஒப்பந்த திகதி 5 இலிருந்து மாற்றம்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறாது எனவும், குறித்த நிகழ்வு வேறு ஒரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தில் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றதால் கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கூட்டணியில் இணையவுள்ள கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஐ.தே.கவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணியின் யாப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளரை நியமித்ததன் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஒரு தரப்பினரும், கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னரேயே ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட வேண்டும் என மற்றுமொரு சாராரும் பிடிவாதமான கருத்தைக் கொண்டுள்ளமை நெருக்கடியை உக்கிரப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply