நிவாரணப் பணியாற்ற ஐ.நா பணியாளருக்கு கட்டுப்பாடில்லை
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு எதுவிதமான கட்டுப்பாடுகளும் கிடையா தென்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும், மனித நேய பணிகளுக்குப் பொறுப்பானவருமான நீல் பூனே தெரிவித்தார். ஐ. நா. பணியாளர்கள் அரசுடன் இணைந்து தொடர்ந்தும் செயலாற்றி வருவதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பூனே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.நா.வின் அனைத்து தொண்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் கலந்துகொண்டு தற்போதைய மனிதநேய பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.
சிறுவர்கள் தொடர்பான ஐ.நா. வரைவிலக்கணத்தின்படி நலன்புரி முகாம்களில் 40% சிறுவர்கள் உள்ளதாக நீல் பூனே சுட்டிக்காட்டினார். முகாம்களில் மலசல கூட வசதி தண்ணீர் வசதி தாராளமாக்கப்பட வேண்டுமென்றும் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டு மென்றும் நீல் பூனே தெரிவித்தார்.
மேலும், முன்னாள் சிறுவர் போராளிகள் 200 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே 59 பேர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐ. நா. நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றுமென்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply