தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் 113 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம் : CID தகவல்

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உட்பட அக்குழுவின் உறுப்பினர்களின் 113 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் என்பன முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்துக்கு இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி இது முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் சானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த முடக்கப்பட்டவற்றில் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் 13 கோடி ரூபா பெறுமதியான பணமும் காணப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.

இதுவரையில் 60 பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடையே பெண்களும் காணப்படுவதாகவும் பணிப்பாளர் சானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply