ஜம்மு காஷ்மீர்தான் இந்தியாவின் மகுடம் : பிரதமர் மோடியின் முழு உரை விவரம்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது.

370, 35ஏ இருந்ததால் காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தரவேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன.

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது. 

காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்.

3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.

காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி நடத்தலாம்.

காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும்.

தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 1947க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன, ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும்.

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு துணையாக 130 கோடி மக்களும் இருக்கிறார்கள். சிறிது சிறிதாக ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை திரும்பும். ராணுவம் மற்றும் காவல்துறையின் பணிகள் பாராட்டும்படியாக உள்ளது

இன்றைய சூழலை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொண்டு மாறி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் யாரும் பறிக்கக் கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள், இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply