அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்:பசில் ராஜபக்ஷ
ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெற உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டிற்கு உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டவர்கள் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவதாகவும் அவர் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுக்குள் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply