புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிய உலகமே ஆவலுடன் உள்ளது : மஹிந்த
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (11) அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறலாம் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தனது கட்சி பொதுமக்களிடத்தில் மேலும் ஜனரஞ்சகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்கள் ஊடாக மக்களுடன் பேசவுள்ளதாகவும் வேட்பாளர் யார் என்பதை அறிந்துகொள்ள முழு உலகிலுமுள்ள இலங்கை மக்கள் உட்பட வெளிநாட்டவர்களும் ஆவலுடன் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply