ஸ்ரீ ல.பொ.பெரமுனவின் கூட்டம் இன்று மாலை 3.00 மணிக்கு, இரு நோக்கங்கள் : திலும் எம்.பி.

இரு நோக்கங்களை அடிப்படையாக வைத்து இன்றைய பொதுஜன பெரமுன கட்சியின் பொதுக் கூட்டம் இடம்பெறுவதாக அக்கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் திலும் அமுனுகம எம்.பி. தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று (11) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவத்தை பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் இருந்து எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்கப் போகின்றார்.

அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஸவினால் அறிவிக்கப்படவுள்ளார்.

இந்த இரு பிரதான நடவடிக்கைகளுக்காகவுமே இன்றைய பொதுக் கூட்டம் நடைபெறுவதாகவும் திலும் அமுனுகம எம்.பி. மேலும் கூறியுள்ளார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply