எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் துப்பாக்கி சுட்டு கொலை : பணம் கொள்ளை
பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. பணத்தை கொள்ளையிடுவதற்காக இன்று அதிகாலை 12.15 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஊழியர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அரணாயக்க பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply