ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று (11) மாலை 3.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இன்றைய நாள் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக கட்சியின் தலைமைத்துவம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.

இதன்பின்னரே, அக்கட்சியின் தலைவராக இருந்து மஹிந்த ராஜபக்ஸவினால் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நீண்ட உரையின் பின்னர் அறிவிக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply