ஏமன்: அரசுப் படைகளுடன் புரட்சிப்படையினர் உச்சக்கட்ட மோதல் : 40 பேர் பலி

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகள் மற்றும்  துறைமுக நகரமான ஏடனில் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டைநாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏடன் நகரில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து அரசுப் படைகளுடன் புரட்சிப்படையினர் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, இந்த மோதலில் இருதரப்பிலும் 40-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தததாகவும் சுமார் 260 பேர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு முகமையும் உறுதிப்படுத்தியுள்ளது. 

மேலும், தாக்குதல்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply