இடம்பெயர்ந்த சிறுவர்களின் மேம்பாட்டிற்க்காக சிறுவர் கிராமம்
இடம்பெயர்ந்துள்ள சிறுவர்களை யுத்த சூழலிலான மன நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் சிறுவர் கிராமம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ள சிறுவர்களை இலக்காகக் கொண்டு இக் கிராமத்தினை சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் இவ்வாறான சிறுவர் கிராமங்களை துரிதமாக அமைக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் சுமார் ஒரு இலட்சம் சிறுவர்கள் உள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply