பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடான நாள்: 14-8-1947

1947-ல் இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாகிஸ்தான்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

  • 1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880-ல் கட்டி முடிக்கப்பட்டது.
  • 1900- ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
  • 1908- முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
  • 1912 – நிகராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்க கடற்படையினர் நிகராகுவாவை முற்றுகையிட்டனர்.
  • 1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
  • 1937 – 6 ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
  • 1945 – பசிபிக் போர் முடிவுற்றது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
  • 1947 – பிரிட்டன் ஆக்கிரமிப்பு இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்தது.
  • 1969 – வடக்கு அயர்லாந்துக்கு ஐக்கிய பிரிட்டன் ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
  • 1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
  • 2006 – இஸ்ரேல்- லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
  • 2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
  • 2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply