ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் : நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை
ராஜீவ் காந்தி கடந்த 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் காலமான பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார். ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி, இந்தியாவின் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 6-வது பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார். இவர் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்தநாளான இன்று, என் மரியாதையை செலுத்துகிறேன்’ என ராஜீவ் காந்தியை நினைவுக் கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply