வாக்குச் சீட்டில் மாற்றம் வேண்டும்: விக்டர் ஐவனின் புதிய யோசனை
ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் விரும்பாத ஒருவருக்கு தமது வாக்கைத் தெரிவிப்பதற்கு வாக்குச் சீட்டில் ஒரு இடம் வழங்கப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ராவய சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற “சீதல ஈதல” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.
இந்த நாட்டில் வர்ணங்களின் பின்னால் செல்லும் அரசியல் போக்கை மாற்றி விடுவதற்கு, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வழியமைக்கும். இலங்கையின் அரசியல் நிலைமை கடந்த காலங்களைப் போன்று நடைபெறும் ஒன்று அல்ல. சமூக வலைத்தளங்கள் மக்களின் கருத்துக்களைப் புதுமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு காலத்தில் வாழ்கின்றோம்.
வேட்பாளராக வரும் தரப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு எந்தவொரு மாற்றத்தையும் செய்யாத போக்கில் உள்ளவர்கள். இந்த ஆட்சியாளர்களையே மீண்டும் தெரிவு செய்வதற்கு மக்கள் இன்று விருப்பமில்லாது காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இவ்வாறு விருப்பமில்லாத வாக்காளர்கள் குறித்து மக்களுக்கு தமது தெரிவை அறிவிக்க இப்படியான ஒரு ஏற்பாடு வாக்குச் சீட்டுக்களில் காணப்படுகின்றன. கட்சியின் பின்னால் செல்பவர்களை விட்டுவிட்டால், நடுநிலையாக சிந்திப்பவர்கள் இந்த நாட்டில் நிறையப் பேர் உள்ளனர்.
இவ்வாறானவர்கள் இம்முறை இந்த அரசியல்வதிகளுக்கு ஒரு பாடத்தைப் புகட்ட முனைவார்களாயின் எமது நாட்டின் அரசியல் போக்கை மாற்றம் காணச் செய்யலாம் எனவும் அவர் தனது நீண்ட கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply