விமான நிலையத்தில் சூட்கேஸ் திருடிய ட்ரம்பின் முன்னாள் கூட்டாளி கைது
அமெரிக்காவின் முன்னணி நகரங்களில் சாவ்லா நட்சத்திர ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் உரிமையாளர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வி.கே.சாவ்லா ஆவார். தற்போது இவரது மகன்களான சாவ்லா மற்றும் சுரேஷ் சாவ்லா சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாவ்லா கடந்த வார இறுதியில் டென்னிசி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் சூட்கேஸ் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலிசார் கூறுகையில், ‘சூட்கேஸ் ஒன்றை திருடி தனது காரின் பின்புறம் வைத்த அவர் மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்று விட்டார். சோதனையில் அவரது காரில் கடந்த மாதம் மற்றொரு விமான நிலயத்தில் காணாமல் போன சூட்கேஸ் இருந்தது” என்றனர். விசாரணையில் அவர் சூட்கேஸ் திருடியதை ஒப்புக்கொண்டார். அதை அவர் விளையாட்டாக சாகசமாக நினைத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியரான வி.கே.சாவ்லா 1988ம் ஆண்டு வர்த்தகம் தொடங்குவதற்காக வங்கிக்கடன் பெற அதிபர் டொனால்ட் டிரம்பின் தந்தை பிரெட் டிரம்பின் உதவியை நாடினார். அன்று முதல் டிரம்ப்-சாவ்லா உறவு தொடர்ந்து வந்தது.
நட்சத்திர ஹோட்டல்கள் நடத்தி வரும் சாவ்லா சகோதரர்கள் டிரம்ப் குழுமத்துடன் இணைந்து க்ளிவ்லேண்ட் நகரில் மேலும் சில நட்சத்திர ஹோட்டல்கள் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஜனநாயக கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக டிரம்ப் குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply