தமிழ் மக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க அரசியல் தீர்வு வேண்டும்

யுத்தம் முடிந்துள்ள நிலையில் அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து, தமிழ் மக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது அனைத்து அதிகாரங்களும் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கிறது. அது சிறந்தது எனில் எமக்கு பரவாயில்லை. சமஷ்டி அவசியமில்லை. இந்தேனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தனியான தேசியக் கொடி தனியான தேசிய கீதம் என்பன வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் ஒற்றையாட்சி அரசாங்கமே. விமல் வீரவன்ஸ போன்றவர்கள் எதனை விரும்புவார்களோ தெரியவில்லை. இவர்கள் விரும்புவது போல் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாது. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு முறையொன்று இருக்கிறது. முழு உலகமும் இலங்கையுடன் இல்லாமல், இவர்கள் தேவையான வகையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. டக்ளஸ் தேவானந்தா, தமிழ் கட்சிகள் முஸ்லீம்கட்சிகள், இடதுசாரிகள் இவை அனைத்தையும் இல்லாமல் செய்து விட்டு, அரசாங்கத்தை நடத்த முடியாது.

தீப்பிடித்துள்ள நேரத்தில் தோட்டத்தில் பூச்செடியை நாட்டுவது குறித்து பேச முடியாது. முதலில் தீயை அணைக்க வேண்டும். இதன் பின்னர் சிறந்த நிர்வாகம், நாடாளுமன்ற முறை 17வது அரசியல் சாசனத் திருத்தம் இவை அனைத்தை குறித்தும் பேசுவோம்.

தமிழ் மக்களுக்கு அவை எதுவுமில்லை. சாப்பாடு கேட்கும் போது உடை கொடுப்பதில் அர்த்தமில்லை. எல்லோரும் ஒன்றாக செல்ல முடியாது. அப்படி செல்ல வேண்டுமாயின் முழு நாட்டிலும் ஒரே விதமான சூழல் நிலவவேண்டும்.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அரசியல் தீர்வொன்றை வழங்கி தமிழ் மக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க வேண்டும். இதனையே முதலில் செய்ய வேண்டும்.

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் ஏற்படும் சமூக யதார்த்திற்குள் இருந்து ஏனையவற்றுக்காக போராட முடியும்.யுத்தத்தில் வெற்றிப் பெற்றுள்ளதால் தேசத்தை வெற்றிக்கொள்ள முடியாது.உலக மக்களின் அறிவு திறன் அதிகரிக்கும் போது, இந்த பிரச்சினைகளை தீர்க்க செல்லாமல் புத்தியை பயன்படுத்தி தீர்க்கும் முறைமையை கண்டறிந்து கொண்டனர். அவற்றை ஐக்கியம், ஒற்றையாட்சி, சமஸ்டி, கூட்டாச்சி,ஆகிய வார்த்தைகளில் அழைக்க முடியும் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply