டிரம்ப் மனைவி, வடகொரியா தலைவர் ரகசிய சந்திப்பா? : வெள்ளை மாளிகை விளக்கம்
பிரான்சில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டுக்கு இடையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா உடனான விவகாரங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர், “பல்வேறு வளம் மற்றும் திறன் கொண்ட நாட்டை கிம் ஜாங் அன் நிர்வகித்து வருகிறார். அவரை பற்றி எனக்கும், எனது மனைவிக்கும் நன்கு தெரியும்” என கூறினார்.
வடகொரிய தலைவர் குறித்து, மெலானியாவுக்கு நன்கு தெரியும் என டிரம்ப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, கிம் ஜாங் அன்னை, மெலானியா ரகசியமாக சந்தித்து பேசியதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், “ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியாவும், வடகொரிய தலைவரும் இதுவரை தனியே சந்தித்ததில்லை” என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
இது குறித்து, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானீ கிரஷம் கூறுகையில், “வடகொரிய தலைவர் உடனான நட்புறவு உள்பட அனைத்து விவகாரத்தையும் ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவியிடம் பகிர்ந்து இருக்கிறார். அதனால் தான் கிம் ஜாங் அன் பற்றி, தனது மனைவிக்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருப்பார்” என கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply