இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன்

இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ இந்தியன் எக்ஸ்பிரெஸ் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் “இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன். சீனா இலங்கையில் அபிவிருத்தி வேலைகளுக்கு மாத்திரமே வந்துள்ளது“ என்று கூறியுள்ளார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி வருமாறு;

ஜனாதிபதி :- நான் இலங்கை மண்ணில் நின்று இந்தியாவுக்கு எதிராக வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்.

சேகர் குப்தா :- எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டீர்களா?

ஜனாதிபதி :- எந்தவிதத்திலும் அனுமதிக்க மாட்டேன்.

சேகர் குப்தா :- சீனா இலங்கையில் அபிவிருத்து வேலைகள் செய்ய அனுமதித்துள்ளீர்கள். அதுபோல இந்தியாவும் ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அனுமதிப்பீர்களா?

ஜனாதிபதி :- ஏன் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கட்டாயம் அதைச் செய்யவேண்டும். நான் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி அளித்துள்ளேன்.

ஜனாதிபதி :- நான் இங்கே சிறுபான்மையைர் என்ற ஒன்று இல்லை என்று சொல்லிவிட்டேன். இலங்கையிலே சிறுபான்மை என்று ஒன்று இல்லை. இங்கு இரணடு தேசிய இனங்களே உண்டு. ஒன்று நாட்ட்டை நேசிப்பவர்கள் . மற்றது நாட்டை நேசிக்காதவர்கள். கடந்த கால வரலாற்றை மறந்து விடுவோம். நாம் ஒரு புது வாழ்வைத் தொடங்க வேண்டும்.

சேகர் குப்தா :- தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு மிடையே ஒரு வித்தியாசம் இல்லையா?

ஜனாதிபதி :- அப்படி ஒரு வித்தியாசமும் இல்லை. அப்படி இருக்க விட இயலாது. எனது சொந்தகாரர்கள் தமிழர்கள்.

சேகர் குப்தா :- சில உறவினர்கள்.

ஜனாதிபதி :- சில உறவினர்கள். எனது மருமகள் ஒரு தமிழரை மணந்துள்ளார். அவர் பாராளுமன்ற அங்கத்தவர். நான் எப்படி வித்தியாசத்தைக் காட்ட முடியும்.

சேகர் குப்தா :- உங்கள் நாட்டுப் பெரிய விளையாட்டு வீரன் ஒரு தமிழன். முத்தையா முரளீதரன். உங்களது மந்திரி வினாயகமூர்த்தி முரளீதரன்.

ஜனாதிபதி :- அப்படியென்றால் நான் எப்படி சிங்களவரையும் தமிழரையும் வித்தியாசப் படுத்திப் பார்ப்பது. முன்மாதிரியாக முத்தையா முரளிதரன இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply