கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படும்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளங்களை பூர்த்தி செய்து தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று அம்பாறை போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான சுசந்த புஞ்சி நிலமே, பி. தயாரட்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு வைத்தியசாலை, மட்டக்களப்பு வைத்தியசாலை அக்கரைப்பற்று வைத்தியசாலை, அம்பாறை போதனா வைத்தியசாலை என்பன தரமுயர்த்தப்பட்டு முழுமையான ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மாகாண ஆஸ்பத்திரிகளையும் தரமுயர்த்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply