பாரிஸில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை குறித்து இராணுவத்திடம் சரணடைத்த லோறன்ஸ் திலகரிடம் விசாரணை
தொன்னூறுகளின் பாரிஸில் இடம்பெற்றுள்ள மூன்று அரசியற் படுகொலைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பெரும் அச்சத்துக்குள் ஆழ்த்தியவை. மிகப்பெரிய தற்துணிவோடு இருந்த மிக சொற்பமான `மறுத்தோடி`களை தவிர புலிகளின் இந்தக் கொலைகளால் `மெளனம்` ஆகிப்போன புலம்பெயர் அரசியல், இலக்கிய கர்த்தாக்கள், வன்னி யுத்த முடிவில் புலிகளின் பெரும்புள்ளிகள் மக்களோடு மக்களாக கலந்து வந்தது போல், பத்தோடு பதினொன்று ஆனார்கள்.
இலக்கியவாதியும் மனித உரிமைகள்வாதியுமான சபாலிங்கம், விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் நாதன், ஈழமுரசுப் பத்திரிகையின் ஆசிரியர் கஜன், ஆகியோரின் கொலைகள் குறித்து, தற்போது இராணுவத்திடம் சரணடைந்து விசேட முகாமொன்றில் இருக்கும் லோறன்ஸ் திலகரிடம் விசாரிக்கப்பட வேண்டுமென பாரிஸிலிருந்து சிலர் அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1994 மே 1ம் திகதி பிற்பகல் 1 மணியளவில் துப்பாக்கி சகிதம் அவரது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு புலிகள் அமைப்பினர் அவரது மனைவி, குழந்தை முன்னால் சபாலிங்கத்தை சுட்டுக் கொன்றுவிட்டு குடும்பத்தினரையும் எச்சரித்துவிட்டு தப்பியோடினர். நாதனையும் கஜனையும் குறிப்பிட்ட ஒரு இடத்திற்குச் சந்திக்க வருமாறு நன்கு திட்டமிட்ட முறையில் தகவல் கொடுத்தவர்கள் அங்கு காத்திருந்து அவர்கள் இருவரும் சுட்டுக்கொன்றனர். இந்த கொலைகள் நிகழ்ந்த காலத்தில் பாரிஸில் முடிசூடா சிற்றரசாக இருந்தவர் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரான லோறன்ஸ் திலகர் ஆவார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply