இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்: ரோஹித போகல்லாகம

இலங்கை அரச படையினர் மீது தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கைக்குள்ளேயே இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் தான் விசாரிக்குமே தவிர அவை சர்வதேச அமைப்புகளினால் விசாரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

அரச படையினர் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்பட அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். அதேநேரம் நெடுங்காலமாக யுத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்த நாட்டை அதிலிருந்து வெளிக்கொண்டுவந்து, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயன்ற காரியங்கள் அனைத்திலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply