காலிமுகத்திடலில் படையினரின் வெற்றியை கொண்டாடும் வைபவம்
புலிகளுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக் கொண்ட வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவமொன்று எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்பட விருக்கிறது. இந்த வைபவத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த வைபவத்தில் முப்படைகளின் தளபதியும், இலங்கை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிய வருகிறது.
இதன் போது, முப்படையினரின் அணி வகுப்பு இடம் பெறுவதுடன், யுத்தகளத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவ கடற்படை, விமானப் படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படை வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நிகழ்வில் விசேட கெளரவிப்பு வழங்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply