கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பை கைவிட்டனர்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தொடர்ச்சியாக 38 நாட்களாக மேற்கொண்டுவந்த பகிஷ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இன்று (ஜூன். 1) திங்கட்கிழமை முதல் விரிவுரைகள் வழமைபோன்று நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்த இப்போராட்டமானது கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தலையீட்டினால் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தகுதிகாண் விரிவுரையாளர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை பீடத்தைவிட்டு அகற்றுமாறு கோரியே மாணவர்கள் இப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதனை கருத்திற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை குறித்த விரிவுரையாளர் தொடர்பான முறையான விசாரணைகள் நிறைவுறும் வரை அவர் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் தவிர்ந்த வேறு பீடத்தில் இணைக்கப்பட்டுள்ள?ர் என அறிவித்தது.

மேலும் எதிர்காலத்தில் எமது பீடத்தில் சுமுகமாக கல்வி நிர்வாக நடவடிக்கைகள் முன்வைக்கப்படுவதை மூன்று பீடாதிபதிகள் அடங்கிய விசேட கண்காணிப்பு குழு உறுதிசெய்யும் எனவும் துணைவேந்தரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் மீது பூரண நம்பிக்கை கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக தடைப்பட்டிருக்கும் எமது கல்வி நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு இன்றுமுதல் விரிவுரைகளுக்கு சமுகமளிப்பதென்று மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விரிவுரையாளரை பீடத்தைவிட்டு நிரந்தரமாக அகற்றினாலேயே பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக புத்துயிர் பெறும் என்பது மாணவர்களின் ஒருமித்த கருத்தாகுமென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply