வவுனியா – யாழ் ரயில் பாதை நிர்மாண பணியை 2010ல் பூர்த்தியாகும்
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோ மீட்டர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைக்க நிதியமொன்று அமைக்கப்பட்டுள்ள தோடு இதற்கு சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கோரியுள்ளார்.
வடக்கு வசந்தம் திட்டத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதுருமிதுரு திட்டத்தினூடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை இடம்பெற உள்ளது.
வடக்கிலுள்ள உறவினர் வீடுகளுக்கு ரயிலில் பயணம் செய்ய கனவுகானும் மக்களின் கனவு அடுத்த வருடம் நனவாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அலஹப்பெரும 2010ல் ரயில் பாதை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரயிலில் கொழும்பு வர எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் கனவும் விரைவில் நிறைவடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வவுனியாவில் இருந்து வடக்கு வரையான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் சிலவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மக்கள் ஏற்றுள்ளதோடு வேறு சில அரச நிறுவனங்கள் கட்சிகள் என்பனவும் இந்தப் பணிக்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply