தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை சுதந்திரக் கட்சியில் இணையுமாறு அமைச்சர் முரளீதரன் அழைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கும் அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் மட்டக்களப்பு மாநகர முதல்வரான சிவகீத்தா பிரபாகரனைச் சந்தித்து இது தொடர்பான பேச்சவார்த்தைகளை நடத்தியுள்ளார்.கொள்கையளவில் இதனை மாநகர மதல்வர் சிவகீத்தா பிரபாகரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைய தற்போது வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடன் உரையாடியதாக மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் கூறுகின்றார்.

“ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவருடைய கொள்கைகள் இன ,மத,மொழி பேதமற்றதாக இருப்பதால் என்னைப் பொறுத்தவரை ஸ்ரீ.ல.சு.கட்சியாக இருப்பதையே நான் விரும்புகின்றேன்.” என்றும் கூறும் அவர்,”தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பீடம் ஸ்ரீ ல.சு.கட்சியில் அங்கம் பெறுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் .தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள கட்சித் தலைவரான முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பிய பின்பு இது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் ” என்றும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply