வேட்பாளர் கோட்டாபயவின் பிரஜாவுரிமை : சம்பிக்க ரணவக்க விமர்சனம்
கோட்டாபய ராஜபக்ஸ இன்னும் அமெரிக்க பிரஜையாவார் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்களுக்கு நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ராஜபக்ஸாக்கள் இன்று பெரிதாக பேசும் விடயம் தான் என்ன? முதலாவது தேசப்பற்று, அவர்கள் தேசப்பற்றாளர்கள் நாம் தேசத் துரோகிகள். இப்போது இதன் நிலைமைதான் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ இன்னும் அமெரிக்க பிரஜை. இதிலிருந்து நீங்கிக் கொள்வதாக அவர் அறிவித்தது உண்மை. இருப்பினும், அமெரிக்க அரசாங்கம் இதுவரை அவர் விலகிக் கொண்டதாக உத்தியோகபுர்வ அறிவிப்பு விடுக்கவில்லை.
கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றவுடன் என்ன கூறியுள்ளார். இறைவனின் பெயரினால் தான் அமெரிக்காவை பாதுகாப்பதாகவும், அமெரிக்க கொடியைப் பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்தே கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் பிறந்து வளர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, லொஸ் எஞ்ஜலீசுக்குச் சென்று அங்கு அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளார். தற்பொழுது, ஏன் அவருக்கு அமெரிக்க பிரஜாவுரிமை இரண்டாம் பட்சமானது?
அவரது குடும்ப சபை அமர்வில் காலை கூடிய போது கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்ற தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் பெறப்பட்டது.
இதன்பின்னர்தான் அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை விடத் தீர்மானித்தார். இதன்கருத்து, அமெரிக்க பிரஜாவுரிமை இரண்டாம் பட்சமாக காரணம், இலங்கையின் ஜனாதிபதிப் பதவி மாத்திரமே. இதுதான் அவரின் தேசப்பற்றா? எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply