ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் கலாநிதிப் பட்டம்
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் ஆற்றிய சேவையைப் பாராட்டி கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டத்துறையில் கலாநிதிப் பட்டமும் பாதுகாப்புச் செயலாளருக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதிப் பட்டமும் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே. சானிகா ஹிரிபுரேகம தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவின்போது ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்குமான பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply