ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் நவம்பர் 18ம் திகதி
எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 18ம் திகதி பகல் வேளையிலேயே வெளியிட முடியுமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் வாக்குச்சீட்டு மிக நீளமாக இருப்பதால் வாக்கு கணக்கெடுப்பின் போது அதிக நேரம் செலவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஒரு மாகாணத்திலாவது இலத்திரனியல் முறைமையில் வாக்கெடுப்பு நடத்தி ஒத்திகை பார்க்க வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதற்காக தற்போது இந்தியா மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply