அகில இலங்கை இந்து மாமன்றம் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை நலன்புரி நிலையங்களில் விநியோகித்துள்ளது.
வவுனியா இடைத் தங்கள் முகாமில் உள்ளவர்களுக்காக கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்க பிரமுகர்களும், இந்து மாமன்றமும், கொழும்பு பிரதேசத்தில் உள்ள பொதுமக்களும் வழங்கிய மூன்றரை கோடி ரூபா பெறுமதியான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் நலன்புரி நிலையங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்ற உதவிச் செயலாளர் நவரட்ணசாமி கார்த்திகேயன் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான பால் மா உட்பட பால்மா வகைகள், ஊட்டச்சத்துமிக்க உணவுகள், பானங்கள் உடைகள், படுக்கை விரிப்புகள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் போன்ற நிவாரண பொருட்களே இவ்வாறு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகள் பலவற்றை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ள போதிலும் அவர்களின் பல தேவைகள் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக நிவாரணப் பொருட்களை கொடுப்பதற்காக முகாமுக்குள் சென்று வந்துள்ள நவரட்ணசாமி கார்த்திகேயன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply