அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை : கோட்டா

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காலியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உள்நாட்டு விவசாயிகள், செய்கையாளர்கள் தொடர்பாக எவ்வித கரிசனையும் செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த தேயிலையைக் கொண்டு வரப்படுகின்றது.

அத்துடன், மிளகு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளதால், தரமான தேயிலைக்கும் மிளகிற்கும் சர்வதேச சந்தையில் இருந்த சிறந்த விலை தற்போது இல்லாமற்போயுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற தரம் குறைந்த தேயிலையையும் மிளகையும் முற்றாக நிறுத்துவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply