பிலிப்பைன்சில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவை மையமாக கொண்டு கடந்த 29-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மிண்டானாவ் தீவில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.5 ரிக்டர் அளவில் பதிவானது. 45 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதேபோல் பள்ளியில் இருந்து மாணவர்கள், மால், அலுவலக கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் தேவோ நகரில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன.
மீட்பு படையினர் விரைந்து வந்து இடிந்து விழுந்த கட்டிடங்களில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளார்.
வீடுகளுக்கு திரும்பி செல்லவே பயப்படுகிறார்கள். அவர்கள் சாலையோரங்களில் தவித்தும் நின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply