LTTE பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி கண்டுபிடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ்வியக்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி ஒன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளையில் த.வி.பு.055 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட குறித்த கருவி ஒரு அடி ஆழமுள்ள குழி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் வீரர் ஒருவரினால் குறித்த கருவி புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply