ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜிலிங்கம்
ரெலோ அமைப்பில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இவர் பதவி வகித்து வந்திருந்தார்.
இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வந்தது.
இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகீந்தாவிடம் கடிதமொன்றையும் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply