சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இரு வாரங்களில் கையளிப்பு

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இணங்கப்பட்ட அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறினார். 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 3 வருடங்களில் 116 தடவைகள் கூடிய ஆராய்ந்த பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

“கூடிய விரைவில் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவிருந்ததாலேயே அதனை இறுதிப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து பாராளுமன்ற முறையின் கீழ் வெஸ்மின்ஸ்டர் முறையை  அமுல்படுத்துவது, மாகாணசபைகளுக்கிடையில் அதிகாரங்களைப் பகிர்தல் போன்ற திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கிராமக் குழுக்களை நியமிக்கும் திட்டங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பு உருவாக்குவது குறித்த யோசனைத் திட்டத்தையும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு பிரேரிக்கவுள்ளது.

இந்த இறுதியறிக்கை தயாரானதும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தமது கையொப்பங்களையிட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply