ஜனநாயகத்தின் வழியில் சென்று அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்வோம்: து.ரஞ்சன்
இலங்கையில் முக்கிய காரணமாக திகழ்ந்த பயங்கரவாதம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு ஜனநாயகத்தின் பாதையின் வழியில் சென்று கொண்டிருக்கும் நாம் எதிர்வரும் காலங்களில் நாமும் எமது சந்ததிகளும் சாந்தி சமாதானத்துடனும் சுபீட்ச்சத்துடனும் வாழ்வதற்க்கு வழியமைக்க வேண்டியவர்கள் நாங்களே எனவே இதை மறந்து செயற்பட்ட காலங்கள் கடந்த கால நிகழ்வுகளாக இருக்கட்டும்.
ஆகவே இனியும் நாம் இலங்கையில் வேறுபட்டவர்களாகவோ அல்லது வேறுபட்ட இனமாகவோ வாழ்வதில் அர்த்தமில்லை எந்தவொரு இனமாக இருந்தாலும் எந்தவொரு மதமாகவோ இருந்தாலும் சரி ஒருதாய் பெற்றெடுத்த குழந்தைகள் போல் இலங்கை திருநாட்டில் நல்லதோர் ஜனநாயகத்தை ஏற்ப்படுத்தி அவ் ஜனநாயகத்தின் வழியகவே எமக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொள்வோம் ஆகவே என் அன்பிக்கினிய இலங்கைத் தாய் பெற்றெடுத்த இலங்கை வாழ் மக்களே ஒன்றுபட்டவர்கள் நாம் ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே கொடி என்று வாழ்வோம். இக் காலத்திலேயே ஒற்றுமையை வளர்த்து ஒன்றுபட்டவர்களாய் வாழ வழியமையுங்கள் அதுவே எமக்கு பெரும் வெற்றி என்றார் அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் மக்கள் தொடர்பாளர் து. ரஞ்சன் .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply