சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க முயற்சிக்கக்கூடாது: ஞானசார தேரர்
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்ற போதிலும், அவர்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்தித்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடமேல் ஆளுநர் மொஹமட் முசமிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply