7.4கிலோ அளவில் கிட்னி அதிர்ந்துபோன மருத்துவர்கள்
அடிவயிற்றில் கடுமையாக வலி இருந்தவருக்கு மருத்துவர்கள் சிறுநீரகத்தை அகற்றி வலியில் இருந்து நிவாரணம் அளித்துள்ளனர்.டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் வயிற்று பகுதியை சோதனை செய்து பார்த்துள்ளனர்.அப்போது அவரது கிட்னி சாதாரண அளவை விட பெரிதாக இருந்துள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின்படி அதை அகற்ற திட்டமிட்டு டெல்லியில் உள்ள Sir Ganga Ram மருத்துவமனையில் அகற்றப்பட்டுள்ளது.
அதை வெளியில் எடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் கிட்னியின் எடை 7.4கிலோ இருப்பதை கண்டு அதிர்ந்துபோய்யுள்ளனர்.சாதாரண மனிதனி கிட்னியின் அளவு 120 முதல் 150 கிராம் மட்டுமே இருக்கும் ஆனால், இவருக்கு இவ்வளவு பெரியதாக இருந்துள்ளது.இது குறித்து தெரிவித்த மருத்துவர்கள் Autosomal Dominant Polycystic என்ற நோய் உள்ளவர்களுக்கு இதுபோன்று அசாதாரண அளவில் உடல் உறுப்புகள் இருப்பது சாதாரணமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளனர்.Sir Ganga Ram மருத்துவமனை சார்பில் நோயாளிக்கு எந்த சேதாரமும் இல்லாமல், மருத்துவர்கள் மிக நேர்த்தியாக அந்த 4 மடங்கு பெரிய கிட்னியை நீக்கியதை உலக கின்னஸ் சாதனையில் சேர்க்க பரிந்துரைக்க முடிவு செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply